மோகன்லால் இயக்கும் 'பரோஸ்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கேரள நர்ஸ் வீட்டிற்கு சென்று டாக்குமென்ட்ரி படம் எடுத்த ஐஸ்வர்யா ரஜினி | பக்தி பட இயக்குனர் 'ஓம்சக்தி' ஜெகதீசன் காலமானார் | லாக்டவுனில் அனுபமா பரமேஸ்வரன் | ஹிந்தி படங்களை இந்திய படமாக பார்க்க வேண்டும் : அனல் அரசு சொல்கிறார் | உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா |
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரித்துள்ள படம் டாடா. அறிமுக இயக்குனர் கணேஷ் பாபு இயக்கி உள்ளார். இந்த படத்தில் கவின் நாயகனாக நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்துள்ளார். இந்த படம் வருகிற 10ம் தேதி வெளிவருகிறது.
அபர்ணா தாஸ் கூறுகையில், “கதாநாயகியாக நான் நடித்த முதல் தமிழ்ப்படம் இது என்பதால் எனக்கு எமோஷனலாக இருக்கிறது. கேரளாவுக்கு வந்து கதை சொன்னதில் இருந்து படம் முடியும் வரை எனக்கு உறுதுணையாக நின்ற என் இயக்குநர் கணேஷூக்கு நன்றி. என்னை இயக்குநரிடம் அறிமுகப்படுத்தியது கவின்தான். கவின் இல்லை என்றால் இந்தப் படத்தில் நான் இல்லை. தமிழ் சினிமாவில் இது என் சிறந்த தொடக்கமாக இருக்கும்”என்றார்.
இதுகுறித்து கவின் கூறும்போது ”அபர்ணாவை நான் முதன்முதலில் 'பீஸ்ட்' செட்டில்தான் பார்த்தேன். கதை மேல் இருந்த நம்பிக்கை அவர் மேலேயும் இருந்தது. சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளார்”என்றார்.