ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
குக்வித் கோமாளி சீசன் 4ல் இம்முறை புதிய கோமாளிகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ஒருவராக சோஷியல் மீடியாக்களின் மூலம் அடையாளம் காணப்பட்ட ஓட்டேரி சிவாவுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஓட்டேரி சிவா முதல் இரண்டு எபிசோடுகளுக்கு பிறகு நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டைகர் கார்டன் தங்கதுரை என்ட்ரி கொடுத்துள்ளார். இதற்கு காரணமாக ஓட்டேரி சிவா குடித்துவிட்டு வருவதும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரது செயல்கள் நாகரீகமாக இல்லை என்றும் செய்திகள் பரவின. இதனையடுத்து இதுகுறித்து தற்போது மனம் திறந்துள்ள ஓட்டேரி சிவா, 'நான் குடிக்கமாட்டேன். அவர்கள் சொல்வது பொய். சாப்பாடு எவ்வளவு கொடுத்தாலும் சாப்புடுவேன். நான் பிரபலமாகி அதிகம் சம்பாரிக்கிறேன் என்ற பொறாமையில் சிலர் அப்படி கூறுகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து என்னை நீக்கவில்லை. விரைவில் கூப்புடுகிறோம் என்று கூறியுள்ளனர்' என்றார். மேலும், தனது ரசிகர்கள் தொடர்ந்து தனக்கு ஆதரவு தரும்படியும் வேண்டுகோள் வைத்துள்ளார்.