நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழில் சிம்பு நடித்த போடா போடி என்ற படத்தில் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், அதன் பிறகு தாரை தப்பட்டை, சர்க்கார், சண்டக்கோழி- 2 உள்பட பல படங்களில் நடித்தார். சமீபகாலமாக தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியன் பாலோயர்கள் வந்ததை அடுத்து மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றுள்ளார்.
அதை வெளிப்படுத்தும் விதமாக தான் அதிரடி நடனமாடும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதோடு ‛என் மீது பொழிந்த அன்பிற்கு நன்றி. இரண்டு மில்லியன் பாலோயர்கள் என்பதை பார்த்ததும் என்னுடைய சந்தோஷத்தை பகிரவே இந்த நடனத்தை ஆடுகிறேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதால் மேலும் நெருக்கமாக இருப்பதாக உணர்கிறேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்' என்று பதிவிட்டு வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள இந்த டான்ஸ் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.