நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய், அஜித் அறிமுகமான அதே காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சரவணன். ஆரம்ப காலத்தில் சில ஹிட் படங்களை கொடுத்தார். பார்ப்பதற்கு நடிகர் விஜயகாந்த் போன்ற சாயலில் இருக்கிறார் என பலரும் பாராட்டுக்களாக சொன்னாலும் அதுவே அவருக்கு மைனஸ் பாயிண்டாக அமைந்ததால், பெரிய அளவில் அவரால் சோபிக்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து பருத்திவீரன் படத்தில் கார்த்தியின் சித்தப்பு கதாபாத்திரத்தில் நடித்து சித்தப்பு சரவணன் என்று அழைக்கும் அளவுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வெளிச்சம் பெற்றார். தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் நேற்று எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியாகி உள்ள ‛நான் கடவுள் இல்லை' என்கிற படத்தில் கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சரவணன்.
இதைத்தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார் சரவணன். படக்குழுவினரிடம் இருந்து இவர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் தற்போது நான் கடவுள் இல்லை படத்தின் புரமோஷன் பேட்டிகளில் ஜெயிலர் படத்தில் நடித்து வருவதை உறுதிப்படுத்தி உள்ளார்.
படத்தில் நடித்த அனுபவம் குறித்து இவர் கூறும்போது, ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் 30 நிமிடங்கள் வரும்படியான காட்சிகளில் நடித்துள்ளேன். படம் வெளியானதும் நிச்சயமாக என்னை மக்கள் திட்டுவார்கள். ரஜினி ரசிகனாக இருந்த எனக்கு இத்தனை நாள் கழித்து அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார் சரவணன்.. இதன் மூலமாக ஜெயிலர் படத்தில் அவர் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது