Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் - அமலாபால் ஜிம் போட்டோ : விஷயம் தெரியாமல் புகழும் ரசிகர்கள்

04 பிப், 2023 - 11:02 IST
எழுத்தின் அளவு:
Amalapaul-take-photo-with-Kamal

கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். ஆந்திராவில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தினசரி திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டரில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று வருகிறார். இந்த படத்தில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் அவர் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதே சமயம் முதல் பாகத்தில் இறந்துபோன மகன் கமல் போன்று இந்த படத்திலும் இளமை கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறாரா என்பது இப்போது வரை உறுதி செய்யப்படவில்லை. அதேசமயம் சேனாதிபதி கமலின் இளமைகாலம் தொடர்பான விஷயங்கள் இந்த படத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது நடிகை அமலாபால், கமலுடன் இணைந்து ஜிம் ஒன்றில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு அவரது ரசிகர்கள் பலரும் கமல் இந்தியன் படத்தில் நடித்த அதே சந்துரு கதாபாத்திரம் போலவே இளமையாக காட்சியளிக்கிறார் என்றும் இந்தியன் 2 படத்திலும் அவரது இளமையான கதாபாத்திரம் இருக்கிறது என்றும் கூறி வருகின்றனர்.

ஆனால் இந்த புகைப்படம் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பு அதாவது 2017ல் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது பலருக்கும் தெரியவில்லை. இது ஏதோ இப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் போன்று ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
புதிய சாதனை படைத்த 'லியோ' அறிவிப்பு டீசர்புதிய சாதனை படைத்த 'லியோ' ... ஜெயிலர் படத்தில் நெகட்டிவ் ரோலில் ‛சித்தப்பு' சரவணன் ஜெயிலர் படத்தில் நெகட்டிவ் ரோலில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Anand - chennai,இந்தியா
06 பிப், 2023 - 14:45 Report Abuse
Anand அமலா பாலுக்கு நேரமே சரியில்லை....
Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
06 பிப், 2023 - 09:14 Report Abuse
raghavan அவருக்கு மட்டுமா வயசு ஏறுது? ரசிகர்களுக்கும்தான் ஏறுது. கண்ணு மங்குது. அப்படித்தான் தெரிவாரு.
Rate this:
M Ramachandran - Chennai,இந்தியா
05 பிப், 2023 - 20:06 Report Abuse
M  Ramachandran 16 வயதில் ஷீலாவுடன் ஆரம்பித்தது இன்னுமா இந்த வயதிலுமா ?
Rate this:
Vijay - Chennai,இந்தியா
04 பிப், 2023 - 13:03 Report Abuse
Vijay உங்க ரஜினி லச்சனம் எங்களுக்கு தெரியும்
Rate this:
mohan - chennai,இந்தியா
04 பிப், 2023 - 17:26Report Abuse
mohanஉங்க விஜய் விக்கு லக்ஷணம் எங்களுக்கும் தெரியும் ?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in