கிராமி விருது வென்ற தமிழ்ப்பெண் சந்திரிகா : சென்னை வானொலியில் இசை கேட்டு வளர்ந்ததாக பெருமிதம் | நியூயார்க் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 'கத்தி' பட வில்லன் நீல் நிதின் முகேஷ்! | நயன்தாராவுக்கு இரட்டை பெண் குழந்தை இருந்தால் எப்படியிருக்கும்?: வைரலாகும் ஏஐ போட்டோ | கடவுள் பூமிக்கு வந்தால்… : சிம்புவின் 51வது பட அறிவிப்பு வெளியானது | லக்கி பாஸ்கரை அடுத்து 4 மொழிகளில் துல்கர் சல்மான் நடிக்கும் படம் | தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்: பார்வதி நாயருக்கு விரைவில் 'டும்.. டும்.. டும்..' | பிரியங்கா சோப்ரா இல்லாமல் மகேஷ் பாபு படத்தின் படப்பிடிப்பை துவங்கிய ராஜமவுலி | கண்ணப்பா படத்தில் ருத்ராவாக பிரபாஸ் | சிவகார்த்திகேயனை இயக்கும் அஹமது | லிமிட் தாண்டினால் தடை: மகளுக்கு எச்சரிக்கை விடுத்த இயக்குனர் |
வித்தியாசமான படங்களுக்கு பெயர் போன பிரபல மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி இயக்கத்தில் நடிகர் மம்முட்டி நடிப்பில் உருவான நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படம் கடந்த ஜனவரி 19ஆம் தேதி மலையாளத்தில் வெளியானது. அப்போதே தமிழிலும் வெளியாக வேண்டிய இந்த படத்தின் ரிலீஸ் தேதி சில காரணங்களால் தாமதமானது. மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட் என்று சொல்லப்படாவிட்டாலும் மம்முட்டியின் நடிப்பிற்கும் வித்தியாசமான கோணத்தில் கதையை யோசித்த இயக்குனருக்கும் என ரசிகர்களிடம் இந்த படம் பாராட்டு பெற்று வருகிறது.
ஒரு எளிய கிராமத்து மனிதராக மிகச்சிறந்த நடிப்பை மம்முட்டி வழங்கியிருந்தார். இந்த படம் வெளியாகி சரியாக 20 நாட்கள் இடைவெளிக்குள் அதாவது வரும் பிப்ரவரி 9ஆம் தேதி மம்முட்டி நடித்துள்ள ஆக்சன் படமான கிறிஸ்டோபர் ரிலீஸ் ஆக இருக்கிறது என தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனரும் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் என அறியப்படுபவருமான பி.உன்னிகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
2010ல் முதன்முறையாக மம்முட்டியை வைத்து பிரமாணி என்கிற படத்தை இயக்கிய பி உன்னிகிருஷ்ணன் 13 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் மம்முட்டியுடன் கைகோர்த்திருக்கும் படம் என்பதால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. இந்த படத்தில் சினேகா, அமலாபால், ஐஸ்வர்ய லட்சுமி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.