இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் தனது 42வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சூர்யா. 13 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தின் சரித்திர காலகட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார்கள். இந்த படத்தை முடித்ததும் மார்ச் மாதத்திற்கு பிறகு வெற்றிமாறன் இருக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆனால் முதல் கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெற்ற பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு சில மாதங்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்ளப் போகிறாராம் வெற்றிமாறன். அதனால் அவர் இடைவெளி கொடுக்கும் அந்த இரண்டு மாதங்களில் ஏற்கனவே தன்னை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கும் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் சூர்யா. அந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் இரண்டே மாதத்தில் கேப் விடாமல் நடித்து கொடுத்துவிட்டு அதையடுத்து மீண்டும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் திட்டமிட்டிருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.