நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிக்பாஸ் போட்டியாளரான மைனா நந்தினி, அசீமுக்கு சப்போர்ட்டாக பேசியுள்ள வீடியோ இணையத்தில் அசீமின் ரசிகர்களால் வைரல் செய்யப்படு வருகிறது. பிக்பாஸ் வீட்டில் இறுதிவரை இருந்த மைனா நந்தினி போட்டியில் நான்காம் இடத்தை பிடித்துள்ளார். அண்மையில் பேட்டி ஒன்றில் அசீம் குறித்து பேசிய அவர், 'அசீமுக்குள் ஒரு சூப்பர் கேரக்டர் இருக்கு. கோபத்தில தான் அப்படி வார்த்தைகள் பேசுவானே தவிர மனசுல இருந்து வராது. கோபத்தில பேசினாலும், கோபம் தனிஞ்ச உடனே அவங்ககிட்டயே வந்து இயல்பா பேசிடுவான். அசீமுக்கு கோபத்து பிறகு ஒரு முகம் இருக்கு. அந்த அசீம் எனக்கு பிடிக்கும்' என ஆதரவாக பேசியுள்ளார். அசீமின் ரசிகர்கள் இதை கட் செய்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு அசீமின் புகழ் பாடி வருகின்றனர்.