நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'விஜய் 67'வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளியாகியது. இன்று காலை படக்குழுவினர் காஷ்மீர் படப்பிடிப்புக்காக தனி விமானத்தில் கிளம்பிச் சென்றுள்ளனர்.
படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரான ராம்குமார் இது பற்றிய அப்டேட்டை கொடுத்துள்ளார். காஷ்மீர் பயணிக்கும் விமான டிக்கெட்டின் போட்டோவைப் பகிர்ந்து, “தளபதி 67 படத்தில் நிர்வாகத் தயாரிப்பாளர்… மற்றும் காஷ்மீர் செல்லும் குழுவிர் தளபதி விஜய் சார், இயக்குனர் லோகேஷ், தயாரிப்பாளர் லலித் சார், ஜெகதீஷ் மற்றும் மொத்த குழுவினருடன், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக…,” என்று பதிவிட்டுள்ளார்.
விஜய் 67 அறிவிப்பு ஒரு வீடியோ புரோமோ உடன் வெளியாகும் என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால், நேற்று விஜய், லோகேஷ் இருக்கும் ஒரு புகைப்படத்துடன் மட்டுமே அறிவிப்பை வெளியிட்டார்கள். அடுத்த சில நாட்களில் அந்த வீடியோ புரோமோ வெளியாகலாம் எனத் தெரிகிறது.