நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இந்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகமும், ஷாங்காய் ஒத்துழைப்பு குழுவும் இணைந்து ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவை மும்பையில் நடத்துகிறது. கடந்த 27ம் தேதி தொடங்கிய இந்த விழா நாளை(31) வரை நடக்கிறது. இந்த விழாவில் தொடக்க திரைப்படமாக ஊர்வசி நடித்த அவரது 700வது திரைப்படமான அப்பத்தா திரையிடப்பட்டது. இந்த படத்தில் அவர் மகன்களால் கைவிடப்பட்ட ஒரு தாயாக நடித்திருந்தார்.
ஷாங்காய் பட விழாவில் அப்பத்தா திரையிடப்பட்டது குறித்து படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன் கூறும்போது “இந்த அழகான படத்தின் கதையை என்னிடம் கொண்டு வந்த எழுத்தாளருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது மக்களிடம் கொண்டு சேர்க்கும்போது அவர்கள் என்ன மாதிரியான உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள் என்பதை காண நானும் ஆவலாக இருந்தேன். ஊர்வசி போன்ற திறமையான கலைஞருடன் அவரது 700வது படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். இது எனது முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது” என்றார்.