நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

2023 பொங்கலுக்கு பாலகிருஷ்ணா நடிப்பில் கோபிசந்த் மல்லினேனி இயக்கத்தில் தெலுங்கில் 'வீரசிம்ஹா ரெட்டி' படம் வெளிவந்து 100 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியது. அப்படத்தைப் பார்த்து இயக்குனருக்கு போன் செய்து பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்.
அது குறித்து படத்தின் இயக்குனர் கோபிசந்த் மல்லினேனி, “இது எனக்கு நம்ப முடியாத ஒரு தருணம். தலைவர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சாரிடமிருந்து எனக்கு போன் வந்தது. அவர் 'வீரசிம்ஹா ரெட்டி' படத்தைப் பார்த்து ரசித்துள்ளார். படத்தைப் பற்றி அவர் பாராட்டிய வார்த்தைகள், அவர் உணர்ந்த உணர்வுகள் ஆகியவற்றை விட இந்த உலகத்தில் சிறந்தது எதுவுமில்லை. நன்றி ரஜினி சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பொங்கலை முன்னிட்டு தெலுங்கில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட பாலகிருஷ்ணா நடித்த 'வீரசிம்ஹா ரெட்டி', சிரஞ்சீவி நடித்த 'வால்டர் வீரய்யா' ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.