500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
பிரபல சின்னத்திரை நடிகை மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான தேவிப்ரியா திரைத்துறையில் அட்ஜெஸ்மெண்ட் செய்யாததால் தான் பல வாய்ப்புகளை இழந்ததாக கூறியுள்ளார். சினிமாவை பொறுத்தவரை அஜித் நடித்த வாலி படத்தின் ஒரு சிறிய காட்சியில் மட்டுமே நடித்து பாராட்டுகளை பெற்றிருப்பார் தேவிப்ரியா. ஆனால், அவர் தொடர்ந்து சினிமாவில் பிரகாசிக்கவில்லை. சின்னத்திரையில் வில்லி நடிகை மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக புகழுடன் வலம் வருகிறார்.
அவர் அண்மையில் அளித்த பேட்டியில், 'நியாயமா சொல்லணும்னா சினிமாவுல நடிக்கணும்னா படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கு. அது இல்லைன்னு நான் சொல்லமாட்டேன். சினிமாவுல சின்ன கேரக்டர்ல நடிக்கணும்னா கூட பல பேர் கூட அட்ஜெஸ்மெண்ட் பண்ண வேண்டியிருக்கு. இது நடிகைகளுக்கு பரவலா நடக்குது. இதை பொறுத்துக்க முடியாம தான் பல நடிகைகள் கல்யாணம் செஞ்சிகிட்டு செட்டில் ஆகிட்றாங்க. நான் அந்த மாதிரியான வாய்ப்புகள விரும்புறதே கிடையாது. அந்த நோக்கத்தோடு யாராவது என்னை அனுகினால் உதறி தள்ளிடுவேன். இந்த காரணத்தினாலேயே எனக்கு பல வாய்ப்புகள் கிடைக்காமலேயே போய்டுச்சு' என்று கூறியுள்ளார்.