500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் மற்றும் பலர் நடித்துள்ள 'பதான்' படம் இன்று உலகம் முழுவதும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இந்தப் படம் முன்பதிவு மூலம் மட்டும் சுமார் 70 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாள் முன்பதிவாக இன்று 32 கோடி, இரண்டாம் நாள் பதிவாக 18 கோடி, மூன்றாம் நாள் முன்பதிவாக 19 கோடி என 69 கோடி வரை வசூலித்துள்ளதாம். ஒரு பாலிவுட் படத்தின் அதிகபட்ச முன்பதிவாக சாதனை படைத்துள்ளது.
5.21 லட்சம் டிக்கெட்டுகள் இதுவரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். ஒரு நேரடி ஹிந்திப் படத்திற்கான அதிகபட்ச முன்பதிவு இது. 'பாகுபலி 2' ஹிந்தி டப்பிங் படத்திற்கு 6.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்ட சாதனையை 'பதான்' முறியடிக்கவில்லை. அதே சமயம் 'கேஜிஎப் 2' ஹிந்தி டப்பிங் படத்திற்கு முன்பதிவு செய்யப்பட்ட 5.15 லட்சம் டிக்கெட்டுகள் சாதனையை முறியடித்துள்ளது.
இந்தியாவில் மட்டும் சுமார் 5000க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் 'பதான்' வெளியாகிறது. முன்பதிவு தவிர்த்து முதல் நாள் வசூலாக 45 முதல் 50 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.