500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
சின்னத்திரையில் அசத்தி வந்த கவின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். தொடர்ந்து லிப்ட் படத்தில் நாயகனாக அறிமுகமான இவர் இப்போது ‛டாடா' என்ற படத்தில் நடித்துள்ளார். அபர்ணாதாஸ் நாயகியாக நடித்துள்ளார். பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கணேஷ் கே பாபு படத்தினை இயக்கி உள்ளார். ஜென் மார்டினின் பெப்பியான இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தொடர்பான பணிகள் நடக்கின்றன. சமீபத்தில் டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிப்., 10ல் தியேட்டர்களில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.