500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு, ஹிந்தியில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, தமிழில் சுல்தான் படத்தை அடுத்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. இரண்டு பாடல்களில் விஜய்யுடன் நடனமாடும் ஒரு கதாநாயகியாக மட்டுமே நடித்திருந்தார். இது விமர்சிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அதுகுறித்து அவர் கூறுகையில், வாரிசு படத்தின் கதையைக் கேட்டபோது இரண்டு பாடல்களை தவிர பெரிதாக எனக்கு படத்தில் முக்கியத்துவம் இல்லை என்பது தெரியும். அது தெரிந்தும் நான் அந்த படத்தை ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணம் விஜய் தான். அவரை நீண்ட காலமாக ஒரு ரசிகையாக நான் ரசித்து வந்திருக்கிறேன். அதனால் அவருடன் எப்படியாவது நடிக்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்து வந்தது. அதன் காரணமாகவே வாரிசு படத்தை விடுவதற்கு எனக்கு மனசு வரவில்லை. எப்படியாவது விஜய்க்கு ஜோடியாக நடித்து விட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் வாரிசு படத்தை ஏற்றுக் கொண்டேன். அதோடு நான் ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் அந்த ஹீரோக்களிடம் இருந்து ஏதாவது ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். அந்த அடிப்படையில்தான் வாரிசு படத்தில் நான் நடித்தேன். எனக்கு கூடுதல் முக்கியத்துவம் இல்லை என்றாலும் விஜய்யுடன் நடித்ததால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் ராஷ்மிகா .