மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்து 6 சீசன் வரை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அவரிடத்தில் கேள்வி கேட்டனர். அதில், இந்த சென்னை, மெட்ராஸ் ஆக இருக்கும்போதும் நீங்கள் சினிமாவில் நடித்தீர்கள். இப்பொழுது சென்னையாக இருக்கும்போதும் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது முதல் இப்போது வரை மக்கள் உங்களை ஏற்றுக் கொண்டு வருகிறார்கள்.
மெட்ராஸ், சென்னை இந்த இரண்டில் உங்களுக்கு பிடித்தது எது? என்று கேட்ட கேள்விக்கு, இந்த பதிலை நான் கோபத்தில் சொல்கிறேன் என்றோ போட்டிக்கு சொல்கிறேன் என்றோ கருத வேண்டாம். எனக்கு பிடித்தது தமிழ்நாடு தான். தமிழகம் கூட அல்ல . தமிழ்நாடு தான் பிடித்தது என்பதை ஒத்துக் கொண்டால் மற்ற கேள்விகளுக்கு தானாக விடை கிடைத்து விடும் என்று பதில் அளித்தார் கமல்ஹாசன் .
இதனிடையே விக்ரம் படத்திற்கு பிறகு அதிகமான படங்களில் கமல்ஹாசன் கமிட்டாகி வருவதோடு அரசியலிலும் பிசியாக இருப்பதால் இனிமேல் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்க மாட்டார். பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியோடு முடித்துக் கொள்வார் என்றுதான் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் நேற்று இந்த பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி முடிந்தபோது மீண்டும் சந்திப்போம் என்று கூறிவிட்டு விடை பெற்றார் கமல். இதை வைத்து பார்க்கும்போது, பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியையும் தான் தொகுத்து வழங்கப் போவதை அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.