நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்பர் 1 காமெடி நடிகராக இருந்தவர் சந்தானம். முன்னணி ஹீரோக்கள் பலரது படங்களில் நடித்துள்ளார். அவரது காமெடிக்காக ஓடிய படங்கள் என்றும் சில படங்களை உதாரணமாகச் சொல்லலாம். தங்களது படங்களில் அவர் இருக்க வேண்டும் என விரும்பிய ஹீரோக்களும் உண்டு.
ஆனால், சந்தானம் ஹீரோவாக விரும்பி 2015ல் வெளிவந்த 'இனிமே இப்படித்தான்' படம் மூலம் நாயகனாக மாறினார். அதன் பிறகு நாயகனாக மட்டுமே நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த படங்களில் “தில்லுக்கு துட்டு, ஏ 1, பாரிஸ் ஜெயராஜ்' ஆகிய படங்கள்தான் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதன் பின் அவர் நடித்த 'டிக்கிலோனா' படம் நேரடியாக ஓடிடியில் வெளியானாலும் வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்தது.
அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'சபாபதி, குளு குளு, ஏஜன்ட் கண்ணாயிரம்' ஆகிய படங்கள் மோசமான தோல்விப் படங்களாக அமைந்தது. அவர் எப்போதோ நடித்து முடித்த 'சர்வர் சுந்தரம்' படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இருப்பினும் தற்போது 'கிக்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சந்தானம் மீண்டும் காமெடி நடிகராக நடிக்க சம்மதித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படத்திலும், சுந்தர் சி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள 'அரண்மனை 4' படத்திலும் சந்தானம் நடிக்கப் போகிறார் என்கிறார்கள். சந்தானத்தின் இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை.