மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
ஊடகங்களில் அரசியல் நெறியாளராக பணிபுரிந்து பிரபலமான விக்ரமன் பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் உறுப்பினாராக சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சீசனின் ஆரம்பம் முதலே தனது ஸ்டைலில் சிறப்பாக விளையாடி வந்த விக்ரமனுக்கு பொதுமக்கள் மத்தியில் பெருமளவு ஆதரவு இருந்தாலும், சில சமயங்களில் விக்ரமன் சற்று அதிகமாக அரசியல் பேசுவதாக விமர்சனங்களும் எழுந்து வந்தது. இதைதான் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான வனிதாவும் 'எண்டர்டெயின்மெண்ட் கேம் ஷோவில் அரசியல்வாதிக்கு என்ன வேலை?' என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றியாளர்கள் என்பதை காண உலக அளவில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்காக கடுமையான ஓட்டுசேகரிப்பும் நடைபெற்று வருகிறது. இதில், விக்ரமனுக்காக அவர் சார்ந்துள்ள கட்சி உறுப்பினர்கள் ஓட்டு சேகரித்தனர். இது பிக்பாஸ் நேயர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அந்த கட்சியின் தலைவர் திருமாவளவனும் விக்ரமனுக்காக ஆதரடு தெரிவித்து டுவீட் போட்டுள்ளார்.
இதனை விமர்சித்துள்ள வனிதா, 'ஒரு ரியாலிட்டி ஷோவில் அரசியல் செல்வாக்கை பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. ஒரு தலைவர் அவரது கட்சிக்காரருக்காக ஓட்டு கேட்பதால் நிகழ்ச்சியையே பார்க்காத அந்த கட்சிக்காரர்கள் பெருமளவில் ஓட்டு செலுத்துவார்கள். இது முற்றிலும் முறையற்ற செயல்' என்று விமர்சித்துள்ளார். இதனையடுத்து வனிதாவின் விமர்சனத்திற்கு ஆதரவாக பொதுமக்களும், எதிராக அரசியல் சார்புடையவர்களும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.