ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தெலுங்குத் திரையுலகத்தின் பிரபல தயாரிப்பாளர், வினியோகஸ்தரான தில் ராஜு தயாரிப்பில், தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'வாரிசு'.
இப்படம் ஒரு வாரத்தில் ரூ.210 கோடி வசூலித்ததாக படத்தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே அறிவித்தது. இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் விஜய் கலந்து கொண்டு பேசினார். அதற்குப் பிறகு தெலுங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் அவர் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் இன்று இரவு ஐதராபாத்தில் 'வாரிசு' படத்தின் சக்சஸ் பார்ட்டி நடைபெற உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதில் படக்குழுவினர், தெலுங்கு திரையுலகத்தின் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. விஜய்யும் அதில் கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐதராபாத்தில் 'வாரிசு' படம் சம்பந்தமாக நடைபெற்ற எந்த ஒரு நிகழ்விலும் விஜய் கலந்து கொள்ளவில்லை. இன்றைய பார்ட்டியை விஜய்க்காக மட்டுமே தயாரிப்பாளர் தில் ராஜு தனிப்பட்ட முறையில் நடத்த உள்ளாராம். அதனால், விஜய் கண்டிப்பாகக் கலந்து கொள்வார் என்கிறார்கள்.