நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய் நடித்துள்ள வாரிசு படம் 7 நாளில் ரூ.200 கோடி வசூலை கடந்துள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ஷாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்து பொங்கல் விருந்தாக ஜன., 11ல் வெளியான படம் ‛வாரிசு'.
தமிழ், தெலுங்கில் உருவாகி வெளியான இப்படம் குடும்ப சென்டிமென்ட் நிறைந்த படமாக உருவாகி இருந்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் பொங்கல் தொடர் விடுமுறையால் தியேட்டர்களில் வரவேற்பு நன்றாகவே இருந்தது. முதல் ஐந்து நாளில் உலகளவில் ரூ.150 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் இன்று(ஜன., 18) 7 நாளில் உலகம் முழுக்க ரூ.210 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருதுடன் கொண்டாடி வருகின்றனர்.
அதேசமயம் அஜித் நடித்துள்ள துணிவு படமும் இதே நாளில் வெளியானது. அந்தபடமும் இந்தசமயம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை கடந்து இருக்கும். ஏனோ தெரியவில்லை தயாரிப்பு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. வெறுமென பொங்கல் ரியல் வின்னர் என குறிப்பிட்டு டிரெண்ட் செய்கின்றனர்.