நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'வாரிசு'. கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் இப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வசூலைக் குவித்து வருகிறது. அமெரிக்காவில் ஏற்கெனவே 1 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்தது.
இப்போது யுகே-வில் 6 நாட்களில் 7 லட்சம் பவுண்டு வசூலைக் கடந்துள்ளதாக படத்தை அங்கு வினியோகித்த அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. “யுகே பாக்ஸ் ஆபிசில் தளபதி விஜய்யின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வருவாயை 'வாரிசு, வாரசுடு' படங்கள் கொடுத்துள்ளன. தற்போது ஆறே நாட்களில் 7 லட்சம் பவுண்டுகள் வசூலைக் கொடுத்துள்ளது. இரண்டாவது வாரத்திலும் பல பெரிய தியேட்டர்களில் இப்படம் ஓட உள்ளது,” என அறிவித்துள்ளார்கள். இந்திய ரூபாய் மதிப்பில் 7 லட்சம் பவுண்டுகள் என்பது 7 கோடி ரூபாய்
ஆஸ்திரேலியாவில் 'வாரிசு' படம் 5 லட்சம் யுஎஸ் டாலரை வசூலித்துள்ளது என அங்கு படத்தை வெளியிட்ட எம்கேஎஸ் டாக்கீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 5 லட்சம் யுஎஸ் டாலர்களும், நியூசிலாந்தில் 58 ஆயிரம் யுஎஸ் டாலர்களும் இப்படம் வசூலித்துள்ளது என அறிவித்துள்ளார்கள். இந்திய ரூபாய் மதிப்பில் 4 கோடியே 50 லட்சம்.