மாஸ்டர் 2ம் பாகத்தை விரும்பும் லோகேஷ் | ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் | பென்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது | தோனி குறித்து நெகிழ்ந்த மீனாட்சி சவுத்ரி | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் தண்ணீருக்கடியில் அதிரடி சண்டைக்காட்சி | நம் வீரம் மிகுந்த ராணுவத்தை வணங்குகிறேன் : கமல் | ரஜினி நினைக்கும் விஷயம் | விக்னேஷ்சிவன், நயன்தாரா ஊடலா? | திருநெல்வேலியில் சிம்ரன் பேசியது ஏன்? |
வாரிசு படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67வது படத்தில் நடிக்கிறார் விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மன்சூரலிகான் என பலர் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் விஜய் கேங்ஸ்டர் வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது தனது தம்பி கொலை செய்யப்பட, அதற்கு காரணமானவர்களை பழி வாங்க விஜய் கேங்க்ஸ்டராக உருவெடுப்பதாக கூறப்படுகிறது. இதேபோல்தான் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் தனது நண்பனை கொலை செய்தவர்களை பழிவாங்க ரஜினி கேங்ஸ்டராக உருவெடுப்பார். அந்த வகையில் ரஜினியின் பாட்ஷாவுக்கும், விஜய் 67 வது படத்தின் கதைக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த விஜய் 67 -வது படம் 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது.