நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் இப்போது தான் இனியா என்ற சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில், கடைசி சில நாட்களாக அவர் தனது இன்ஸ்டாவில் 'காலில் எலும்பு முறிவு', 'பேக் டூ ஷூட்டிங்', 'காலில் ஆபரேஷன்' என மாறி மாறி பதிவிட்டு வந்தார். இதனால், ஆல்யாவுக்கு உண்மையிலேயே விபத்தா அல்லது ஷூட்டிங்கிறாக நகைச்சுவையாக எதாவது செய்கிறாரா? என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.
தற்போது, ஆப்ரேஷன் முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ள ஆல்யா, ஒரு மாதத்திற்கு முன் கபடி விளையாடியதாகவும் அப்போது தான் கால் முறிவு ஏற்பட்டதாகவும் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். ஆல்யா ஒரு மாதகாலத்திற்கு ஓய்வு எடுக்க வேண்டும். இருப்பினும் அவர் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என்று தான் தெரிய வருகிறது. இதனையடுத்து ரசிகர்கள் ஆல்யாவுக்கு சீக்கிரம் சரியாக வேண்டும் என ஆறுதல் கூறி வருகின்றனர்.