500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'துணிவு'. இப்படம் வெளிநாடுகளில் லாபத்தைத் தொட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு உரிமை மொத்தமாக 14 கோடி அல்லது 15 கோடிக்கு விற்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் அமெரிக்காவில் மட்டும் 9 லட்சம் யுஎஸ் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் 7 கோடி வசூலையும், மலேசியாவில் 10 லட்சம் யுஎஸ் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் 8 கோடி வசூலையும், கடந்துள்ளதாக படத்தை வெளியிட்டுள்ள வினியோகஸ்தர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இங்கிலாந்தில் 2 லட்சத்து 18 ஆயிரம் பவுண்டு வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதன் இந்திய ரூபாய் மதிப்பு 2 கோடியே 15 லட்ச ரூபாய்.
மேலும், இப்படம் வெளியான கனடா, மத்திய கிழக்கு நாடுகள், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இப்படம் பெரிய வெற்றியடைந்துள்ளதாக படத்தை வெளிநாடுகளில் வெளியிட்டுள்ள லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அஜித் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் 'துணிவு' படம்தான் வெளிநாடுகளில் அதிக வசூலைக் குவித்துள்ள படம் என்றும் குறிப்பிட்டுள்ளது.