ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தமிழ்நாட்டின் தங்க தாரகையே..தங்கமுலாம் பூசிய நிலவே..கண்ணில் இட்ட அஞ்சனத்தால் ஆண்களை கிறங்க வைத்தவளே.. பாரதி கண்ணம்மாவில் தொடங்கிய காவியமே..சேலை கட்டிய சோலையே... என சின்னத்திரை ரசிகர்களை வர்ணிக்க துாண்டி,'மிரள்' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் மிரட்டிய நடிகை காவ்யாவிடம் கொஞ்சம் பேசலாம்...
நீங்கள் என்ன படிச்சிருக்கீங்க
என் பள்ளி படிப்பு எல்லாம் திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் தான். ஆர்கிடெக்ட் படிப்பிற்காக சென்னை வந்தேன். தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போ 5 வருஷமா நடிப்பில் இருக்கேன்.
சினிமா வாய்ப்பு எப்படி கிடைத்தது
குறும்படங்களில் நடித்தேன். அதை தொடர்ந்து 'பாரதி கண்ணம்மா' சீரியலில் அறிவுமணி கதாபாத்திரத்தில் நடித்தேன். பிறகு 'பாண்டியன் ஸ்டேர்ஸ்' தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தேன்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலக காரணம்
நான் எதிர்பார்த்துகொண்டிருந்தது வெள்ளித் திரை. நினைத்தபடி வாய்ப்பு கிடைத்தது. இனி சினிமாவில் மட்டும் நடிக்கலாம் என விலகி விட்டேன்.
நடித்தில் பிடித்த கதாபாத்திரம்
காவ்யாவான என்னை 'அறிவுமணி'தான் இந்த உலகிற்கு தெரிய வைத்தது.
மிரள் பட வாய்ப்பு எப்படி
எப்படி என தெரியவில்லை. இப்போதும் மிரட்சியாக இருக்கிறது.
ஏதேனும் சினிமா வாய்ப்புகளை தவற விட்டீங்களா
சீரியலில் நடிக்கும் போது 'பிகில்' பட வாய்ப்பு வந்தது. அப்போது வேறொரு சீரியலில் ஒப்பந்தம் ஆனதால் அதில் நடிக்க முடியவில்லை.
எந்த ஹீரோவோடு நடிக்க ஆசை
விஜயுடன் நடிக்க ஆசை. அதே போல விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா கூடவும் நடிக்க வேண்டும்.
உங்களுடைய பொழுதுபோக்கு
பெயின்ட்டிங், இன்டீரியர் டிசைன் செய்வேன்.