அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் |
ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தை அடுத்து பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்து வரும் புதிய படம் கிக். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடிக்க, செந்தில், கோவை சரளா, ஒய்.ஜி. மகேந்திரன், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஆக்சன் கலந்த காமெடி கதையில் உருவாகி உள்ள இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை சந்தானம் நடித்த படங்களில் இந்த படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. அதிரடியான ஆக்சன் காட்சிகளோடு வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள் நிறைந்த இந்த கிக் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.