மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
பாலிவுட் திரையுலகை பொருத்தவரை ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் என மூன்று கான் நடிகர்கள் தான் உச்சத்தில் இருந்தாலும் அதிக அளவு ரசிகர்களை கொண்டவராக இருப்பவர் ஷாருக்கான் தான். பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் இவர் தற்போது பதான் என்கிற படத்தில் நடித்துள்ளார். தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் சமீபத்தில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பேஷ்ரங் என்கிற பாடல் காட்சியால் சர்ச்சைக்கு ஆளானது. வரும் ஜனவரி 25ஆம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் ஷாருக்கான் சமீபத்தில் தன்னை சந்திக்க விரும்பிய ரசிகர்களை நள்ளிரவு இரண்டு மணி அளவில் தான் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கே வரவழைத்து சந்தித்து அவர்களை உபசரித்துள்ளார்.
இந்த இன்ப அதிர்ச்சியும் ஆச்சரியமும் விலகாத ரசிகர் ஒருவர் ஷாருக்கானை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் அந்த சந்திப்பு பற்றி குறிப்பிடும்போது, “எந்த ஒரு சூப்பர் ஸ்டாரும் அவருடைய ரசிகர்களுக்காக உங்களை போல இப்படி செய்ததில்லை. நள்ளிரவு 2 மணிக்கு எங்களை நீங்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கே வரவழைத்து உங்களுடைய நேரத்தையும் கவனத்தையும் எங்களுக்காக ஒதுக்கி மரியாதை செய்து விட்டீர்கள். உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி. அதேசமயம் நள்ளிரவில் உங்களை தொந்தரவு செய்ததற்காக வருத்தப்படுகிறோம்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் அந்த ரசிகர்.