ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிலும், சின்னத்திரையிலும் நடித்து வந்த கேப்ரில்லா தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மேலும் புகழ் பெற்ற கேபி சினிமாவில் ஹீரோயினாக கமிட்டாவார் என்றே அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவருக்கு கிடைத்தது சீரியல் வாய்ப்பு தான். தற்போது விஜய் டிவியின் 'ஈரமான ரோஜாவே 2' தொடரில் நடித்து வரும் கேபி தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி கலக்கி வருகிறார். தொடர்ந்து இன்ஸ்டாவிலும் போட்டோஷூட், ரீல்ஸ் என பகிர்ந்து இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ளார். கேபியை இன்ஸ்டாவில் 2 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது தாய்லாந்துக்கு டூர் சென்றுள்ள கேபி அங்குள்ள உயிரியல் பூங்காவிற்குள் புலியின் கூண்டுக்குள் சென்று புலியின் வாலை பிடித்து சேட்டை செய்யும் வீடியோவை வெளியிட்டு, அதன் கேப்ஷனில் 'கூண்டுக்குள்ள குதிக்கும் போது வராத பயம், புலி வால் பிடிக்கும் போது வருது' என தனது திரில்லிங் மொமண்ட்டை ஷேர் செய்துள்ளார்.