ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

சமந்தா நடிப்பில் அடுத்ததாக சாகுந்தலம் என்கிற திரைப்படம் வரும் பிப்ரவரி 17ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. சில மாதங்களாகவே மையோசிடிஸ் எனும் தசை நார் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு வந்த சமந்தா, பொது நிகழ்ச்சிகளில் பங்கெடுக்காமல் இருந்து வந்தார். அதனால் சாகுந்தலம் பட விழாவிலும் அவர் கலந்து கொள்வாரா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சமந்தா கண் கலங்க தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தாவின் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்ட ரசிகர் ஒருவர், சமந்தா தன்னுடைய அழகு, பிரகாசம் முழுவதையும் இழந்துவிட்டார். அவருக்காக வருந்துகிறோம். அவர் தனது விவாகரத்தில் இருந்து மீண்டு வருவார், மேலும் அவரது திரையுலக பயணம் உச்சம் தொடும் என பலரும் நினைத்தார்கள்.. ஆனால் மையோசிடிஸ் நோய் அவரை பெரிதும் பாதித்து மீண்டும் பலவீனப்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கு சமந்தாவும் தக்க பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது சமந்தா விரைவில் பாலிவுட்டில் நடிக்க உள்ள சிட்டாடல் என்கிற படத்தில் அவருடன் இணைந்து நடிக்க உள்ள நடிகர் வருண் தவான், அந்த நெட்டிசனின் கமெண்ட்க்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி வருண் தவான் கூறும்போது, “நீங்கள் இது பற்றி ரொம்பவும் வருத்தப்பட வேண்டாம்.. உங்களுக்கு எவ்வளவு கிளிக்குகள் வருகிறது என்றும் மற்றும் உங்கள் மகனைப் பற்றியும் இதுபோன்று வருத்தப்படுங்கள். அதேபோல அழகுக்காக இன்ஸ்டாகிராமில் நிறைய பில்டர்கள் உள்ளன. இப்போதுதான் சமந்தாவை சந்தித்தேன். அவர் இன்னும் அழகாகிக் கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார் வருண் தவான்.