இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சையில் இருந்தார். அவர் நடித்துள்ள பான் இந்தியா படமான 'சாகுந்தலம்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைப் பகிர்ந்து டுவிட்டரில் ஒருவர், “சமந்தாவுக்காக வருந்துகிறோம். அவர் தன்னுடைய அழகு, பிரகாசம் முழுவதையும் இழந்துவிட்டார். விவாகரத்திலிருந்து அவர் மீண்டு வருவார், மேலும் அவரது திரையுலகப் பயணம் உயரத்தைத் தொடும் என ஒவ்வொருவரும் நினைத்தார்கள். ஆனால், தசை அழற்சி நோய் அவரை பெரிதும் பாதித்து, அவரை மீண்டும் பலவீனப்படுத்தியுள்ளது,” என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த டுவீட்டை பகிர்ந்து அதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் சமந்தா. “எனக்கு நடந்ததைப் போல நீங்களும் பல மாதங்கள் சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு எப்போதும் செல்ல வேண்டாம் என பிரார்த்திக்கிறேன். உங்கள் பிரகாசத்தை மேலும் சேர்க்க என்னிடமிருந்து சில அன்புகளைத் தருகிறேன்,” என வெள்ளை நிற 'ஹாட்டின்' எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.
சமந்தாவின் கருத்துக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.