ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
உலகின் முதல் சூப்பர் ஹீரோ என்றால் அது ஹனுமன் தான். புராண காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வருகிறவர். அவரை நிகழ்கால சூப்பர் ஹீரோவாக சித்தரித்து உருவாகும் படம் ஹனு மேன். பிரசாந்த் வர்மா இயக்கும் இந்த படத்தில் தேஜா சஜ்ஜா நாயகனாக நடிக்கிறார்.
வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர், ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணிலா கிஷோர், கெட் அப் சீனு, சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்ய, கவுர ஹரி, அனுதீப் தேவ், கிருஷ்ணா சவுரப் என மூவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
சூப்பர் ஹீரோ ஜானரில் தயாராகி இருக்கும் இந்த படத்தை பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். வருகிற மே மாதம் 12ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் தயாராகி உள்ள இந்த படம் தமிழ், இந்தி, மலையாளம், மராத்தி, கன்னடம், என இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன் மற்றும் ஜப்பானிய மொழிகளில் தயாராகி உலகளவில் வெளியாகிறது.
ஹனு-மேன் அடிப்படையில் அஞ்சனாத்திரி என்ற கற்பனை உலகில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதையின் நாயகன் ஹனுமனின் சக்திகளை பெற்று அஞ்சனாத்திரிக்காக எப்படி போராடுகிறான் என்பதுதான் கதையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.