மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
விஜய்யின் 'வாரிசு', அஜித்தின் 'துணிவு' இரண்டு படங்களும் நாளை மறுநாள் ஜனவரி 11ம் தேதி ஒரே நாளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் தற்போதைய டாப் ஹீரோக்களில் இவர்கள் இருவரும் முதல் இரண்டு இடங்களில் இருக்கிறார்கள். இப்படி போட்டியில் வெளியிடுவதால் இரண்டு படங்களுக்குமான பேச்சு, பரபரப்பு, எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அதை இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் திட்டமிட்டேதான் செய்துள்ளனர் என்கிறார்கள்.
இரண்டு படங்களுக்குமான முன்பதிவு கடந்த இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்த வாரம் 18ம் தேதி வரையில் முன்பதிவுகளைத் திறந்து வைத்துள்ளனர். 17ம் தேதி வரையிலும் இரண்டு படங்களுக்குமான முன்பதிவுகள் அமோகமாக நடந்துள்ளன. ஒரு சில காட்சிகள், ஒரு சில இருக்கைகளைத் தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்புல்லாக ஆகியிருக்கிறது.
இந்த முன்பதிவு மூலமாகவே தியேட்டர்களுக்காக நடந்த வியாபாரத்தை இரண்டு படங்களும் எடுத்துவிடும் என்கிறார்கள். இரண்டு படங்களும் நன்றாக இல்லை என்றாலும் கூட அது படங்களின் வசூலை பாதிக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. படம் பற்றிய கருத்துக்களும், விமர்சனங்களும் வருவதற்கு முன்பாகவே ஹவுஸ்புல் ஆகிவிட்டதால் அவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. இரண்டு படங்களையும் ஒரே நாளில் வெளியிடும் தயாரிப்பாளர்களின் 'தந்திரம்' பலித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.