500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த பதான் வருகிற 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான படத்தின் பாடலில் தீபிகா படுகோன் காவி உடை அணிந்து ஆபாசமாக ஆடியது பலமான எதிர்ப்பை கிளப்பியது. தணிக்கை குழுவும் ஆட்சேபத்திற்குரிய காட்சிகளை நீக்கி விட்டு படத்தை வெளியிடுமாறு கூறியிருக்கிறது. படம் வெளியாக உள்ள நிலையில் வட இந்தியாவில் படத்திற்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் வஸ்திராப்பூர் பகுதியில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் பதான் பட விளம்பர நிகழ்ச்சி நடந்தது. அப்போது பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் உள்ளே புகுந்கு அங்கிருந்த பேணர்களை கிழித்து எரிந்தனர். விளம்பர ஆர்ச்சுகளை உடைத்து எரிந்தனர். இந்த சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படத்தை திரையிடும் தியேட்டர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஜாக்ரன் மஞ்ச் அமைப்பு குஜராத் தியேட்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளதாக அதன் தலைவர் ஜெகதீஷ் காத்ரி தெரிவித்துள்ளார்.