இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். சீனியர் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தால் தயங்காமல் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். அப்படி இந்த வருடம் அவர் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்துள்ள வால்டர் வீரைய்யா மற்றும் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடித்துள்ள வீர சிம்ஹா ரெட்டி என்கிற இரண்டு படங்களும் வரும் சங்கராந்தி பண்டிகை அன்று ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில் வால்டர் வீரைய்யா படத்தில் நடித்த அனுபவம் குறித்தும், குறிப்பாக அந்த படத்தில் ஸ்ரீதேவி சிரஞ்சீவி என்கிற பாடல் காட்சி படப்பிடிப்பின்போது கிடைத்த அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.
“அந்த பாடல் காட்சியை பனி சூழ்ந்த மலைப்பகுதியில் படமாக்கினார்கள். அந்த காட்சியில் சேலை அணிந்து கொண்டு நடித்தேன். அப்படிப்பட்ட பனிப்பிரதேசத்தில் சேலை அணிந்து கொண்டு ஒரு பெண் நடிப்பது என்பது எவ்வளவு வசதி குறைவானது என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். இனி இதுபோன்று இப்படி ஒரு காட்சியில் நடிக்கும் சூழ்நிலை வந்து விடக்கூடாது என வேண்டிக்கொண்டேன்.. ஆனால் ரசிகர்கள் இதுபோன்ற காட்சிகளை தான் விரும்பி ரசிக்கிறார்கள் என்றும் அதைத்தான் நாங்கள் தொடர்ந்து செய்ய வேண்டி இருக்கிறது என்பதையும் என்னால் யூகிக்க முடிகிறது” என்று கூறியுள்ளார்.