ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
ஹாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெர்மி ரென்னர். அவென்ஜர்ஸ் கேரக்டர்களில் ஒன்றான ஹாவ்க் கேரக்ரில் நடித்து புகழ்பெற்றார். இது தவிர மேலும் பல ஹாலிவுட் படங்களில் நடித்தார். கடந்த 2008ம் ஆண்டு வெளியான 'தி ஹர்ட் லாக்கர்' படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். அதேபோல 2010ம் ஆண்டு வெளியான 'தி டவுன்' படத்தின் சிறந்த துணை நடிகருக்காக ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார்.
இவர் கடந்த 2ம் தேதி விபத்து ஒன்றில் சிக்கினார். புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து விட்டு காரில் வீடு திரும்பியபோது பனிப்புயலில் சிக்கி கார் விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர், படுகாயமடைந்த ரென்னரை மீட்டு, அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது உடல்நலம் தேறி உள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படத்தை வெளியிட்டு, “உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.