ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான தனுஷ் இதற்கு முன்பு ' ப பாண்டி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்திற்குப் பிறகு நாகார்ஜுனா, எஸ்ஜே சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த், அதிதி ராவ் ஹைதரி ஆகியோருடன் அவரும் நடிக்க ஒரு படத்தை இயக்க ஆரம்பித்தார். 'நான் ருத்ரன்' எனப் பெரியடப்போவதாக சொல்லப்பட்ட அந்தப் படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நின்று போனது. சரித்திரப் படமாக உருவான அந்தப் படத்தை கடந்த வருடமே மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், இதுவரை ஆரம்பிக்கவில்லை.
இந்நிலையில் தனுஷ் அடுத்து இயக்க உள்ள ஒரு படம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால் ஆகியோருடன் தனுஷ் நடித்து இயக்க உள்ள ஒரு படம் விரைவில் ஆரம்பமாக உள்ளதாம். அது குறித்து பேச்சு வார்த்தைகளும் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். விரைவில் அதற்கான அறிவிப்பு வரலாம் என்றும் தெரிகிறது.