நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அஜித்துடன் முதன்முறையாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரகனி, ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இருதினங்களுக்கு முன் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் 'தேகிம்பு' என்கிற பெயரில் இப்படம் வெளியாகிறது. இந்நிலையில், துணிவு படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 2 மணிநேரம் 25 நிமிடங்கள் 48 நொடிகள் ஓடக்கூடிய வகையில் படத்தின் ரன்னிங் டைம் உள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தில் 17 இடங்களில் பீப் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.