அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் சந்தீப் கிஷான், நிவேதா சதிஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்தக்கட்ட படிப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி 8ம் தேதி குற்றாலத்தில் துவங்க இருக்கிறது. கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் தனுசுக்கு அண்ணனாக இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார் .
இந்நிலையில் இப்படத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி 10 நாட்களுக்கு படப்பிடிப்பும் நடைபெற்றது. அனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதத்தால் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு பதிலாக சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சித்தார்த்தா கேமரா வேலைகளை செய்ய உள்ளார் . 90 நாட்களுக்கு இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற இருக்கிறது .