போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா |
தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் 'ருத்ரன்'. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் கே.பி.திருமாறன் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். சரத்குமார், நாசர், பூர்ணிமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆங்கில புத்தாண்டையொட்டி இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகிறது.