நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் 2022ம் ஆண்டில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் உட்பட சில முக்கிய பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களை பற்றி பார்க்கலாம்...
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நானும் ரவுடிதான் படத்தில் பணியாற்றி இந்த ஜோடி பின்னாளில் காதலித்து நான்கைந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2022 ஜூன் 9ல் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரெசார்ட்டில் இவர்களின் திருமணம் கோலாகலமாய் நடந்தது. ரஜினிகாந்த், ஷாரூக்கான் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்
தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த இந்த ஜோடி சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். நவ., 28ல் இவர்களின் திருமணம் சென்னையில் எளிய முறையில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் பங்கேற்க நடந்தது.
ஹன்சிகா மோத்வானி - சோஹைல் கத்தூரியா
நடிகை ஹன்சிகா மோத்வானி தனது பிசினஸ் பார்ட்டனரும் நண்பருமான சோஹைல் கத்தூரியாவை டிச., 4ல் திருமணம் செய்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெயப்பூர் அரண்மனை ஒன்றில் இவர்களின் திருமணம் கோலாகலமாய் நடந்தது.
ஹரிஷ் கல்யாண் - நர்மதா
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகரான ஹரிஷ் கல்யாண் தனது தோழியான நர்மதாவை அக்., 28ல் திருமணம் செய்து கொண்டார்.
ஆதி - நிக்கி கல்ராணி
யாகவராயினும் நாகாக்க, மரகதநாணயம் படங்களில் இணைந்து நடித்த ஆதியும், நிக்கி கல்ராணியும் காதலித்து வந்தனர். கடந்த மே 18ல் இவர்களின் திருமணம் பிரமாண்டமாய் நடந்தது.
இயக்குனர் ஸ்ரீகணேஷ் - சுஹாசினி
8 தோட்டாக்கள், இருதிஆட்டம் படங்களின் இயக்குனர் ஸ்ரீகணேஷ், சுஹாசினி என்ற பெண்ணை செப் 7ல் திருமணம் செய்து கொண்டார்.
புகழ் - பென்சியா
குக் வித் கோமாளி உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகளில் காமெடிகளில் கலக்கி வந்த புகழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தான் காதலித்து வந்த பென்சியா என்ற பெண்ணை செப்., 1ல் திருமணம் செய்தார்.