நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

2022 தமிழ் சினிமாவிலும் பிற மொழிகளிலும் பிரபலங்களாக திகழ்ந்த முக்கிய திரைப்பிரபலங்கள் மறைந்தனர். அவர்களை பற்றி விபரங்களை பார்ப்போம்...
* மகாபாரதத்தில் பீமனாகவும், தமிழில் மைக்கேல் மதன காமராசன் படத்தில் கமலின் பாதுகாவலராக பீம்பாய் வேடத்தில் நடித்த பிரவீன் குமார் மறைந்தார்.
* இந்திய சினிமாவின் பாடும் வானம் பாடகியான லதா மங்கேஷ்கர் வயது மூப்பால் பிப்ரவரியில் மறைந்தார். பாடகர்கள் பூபிந்தர் சிங், கேகே எனும் கிருஷ்ணகுமார், இசையமைப்பாளர் பப்பி லஹிரி போன்றவர்களும் இந்தாண்டில் மறைந்தனர்.
இயக்குனர், தயாரிப்பாளர் டி ராமாராவ் மற்றும் தயாரிப்பாளர் கே முரளிதரன் ஆகியோர் மறைந்தனர்.
பழம்பெரும் நடிகைகள் லலிதா, ரங்கம்மாள் பாட்டி ஆகியோரும் மறைந்தனர்.
நடிகர் பிரதாப் போத்தன், சலீம் கவுஸ், சக்கரவர்த்தி, ‛பூ' ராமு, ‛வெண்ணிலா கபடிக்குழு' நடிகர்கள் ஹரி வைரவன், மாயி சுந்தர், பென்சில் பட இயக்குனர் மணி நாகராஜ், கலை இயக்குனர் சந்தானம், வசனகர்த்தா ஆரூர் தாஸ் ஆகியோரும், தெலுங்கு நடிகர்கள் கிருஷ்ணா, கிருஷ்ணம் ராஜூ, சத்ய நாராயண ராவ், சலபதி ராவ் உள்ளிட்ட பிரபலங்கள் மறைந்தனர்.