மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்(99) இன்று(டிச., 31) காலமானார். அவரது மறைவுக்கு உலக தலைவர்கள், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மாநில கவர்னர்கள், முதல்வர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து, பிரதமருக்கு ஆறுதல் கூறி உள்ளனர். ராஜ்யசபா எம்பியும், இசையமைப்பாளருமான இளையராஜா வெளியிட்ட இரங்கல் செய்தி....
நமது பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தேன்.
பிரதமரின் தாயாக இருந்தாலும், தன் மகனிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத தாய்.
எனது தாயாரும் அவ்வாறே!
என்னிடம் எதையும் கேட்டதில்லை. நானும் எதையும் கொடுத்ததில்லை.
இப்படிப்பட்ட அன்னையர்களை உலகில் வேறெங்கு காண முடியுமோ?
அவர் மறைந்தது துயரமே!
நமது பிரதமர் அவர்களின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.
அன்னை ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்
மதிப்பிற்குரிய பிரதமர் மோடி.. உங்கள் வாழ்வில் ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு என் இதயப்பூர்வமான இரங்கல்கள்.. அம்மா.
நடிகர் கமல்ஹாசன்
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன்: ‛‛பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். 200 வயதானாலும் தாய் தாய்தான். இழப்பு இழப்புதான்''.