நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக அறிமுகமான படம் 7 ஜி ரெயின்போ காலனி. சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்த இந்தப்படம் 2004ல் வெளியானது. மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்தப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகின. இந்த படத்தை தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் தயாரித்திருந்தார். தனது மகன் ரவி கிருஷ்ணாவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதற்காகவே இந்தப்படத்தை தயாரித்தார் ஏ.எம்.ரத்னம். இந்த படம் தெலுங்கில் 7ஜி பிருந்தாவன் காலனி என்கிற பெயரில் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் உருவாக்கும் எண்ணம் இருக்கிறது என்று சமீபத்தில் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். சமீபத்தில் நடைபெற்ற சிரஞ்சீவியின் வால்டர் வீரைய்யா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏ.எம் ரத்னம் பேசும்போது, 7 ஜி ரெயின்போ காலனி படத்தை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் எண்ணம் இருப்பதாக கூறியுள்ளார். தற்போது ஏ.எம்.ரத்னம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ஹரிஹர வீரமல்லு என்கிற படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.