நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தென்னிந்திய அளவில் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அந்தவகையில் விஜய்யுடன் இவர் இணைந்து நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையில் ரிலீசாகிறது. அதேசமயம் பாலிவுட்டிலும் இவருக்கு படவாய்ப்புகள் தேடி வருகின்றன. சமீபத்தில் தான் பாலிவுட்டில் இவரது முதல் படமான குட்பை படம் வெளியானது. ஆனால் அவருக்கு அது பாலிவுட்டில் வெற்றிகரமான என்ட்ரி ஆக அமையவில்லை. இதைத்தொடர்ந்து அவர் நடித்துள்ள மிஷன் மஞ்சு திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது.
இந்த நிலையில்தான் ராஷ்மிகா பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிக்கிறார் என்கிற ஒரு தகவல் தற்போது கிளம்பியுள்ளது. அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துள்ளார் ராஷ்மிகா. அங்கிருந்து வெளியே வந்து அவர் காரில் கிளம்பிச் செல்வதும் அங்கிருந்த சில புகைப்படகாரார்களுக்கு கைகாட்டி சென்றதும் என சில புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்தே அவர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு தான் வந்து சென்றுள்ளார் என்று சொல்லப்பட்டு வருகிறது.