நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இதில் 50 வயது கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விஜய். சஞ்சய் தத், அர்ஜுன், நிவின்பாலி, கவுதம் மேனன், மன்சூர் அலிகான், திரிஷா உள்பட பலர் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாஸ்டர் படத்திலிருந்து விஜய்- 67 வது படம் எத்தகைய மாறுபட்ட கதையில் உருவாகிறது என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், மாஸ்டர் படம் விஜய் பாணியில் 50 சதவீதமும், லோகேஷ் பாணியில் 50 சதவீதமும் கலந்து உருவானது. தற்போது உருவாக உள்ள விஜய் 67வது படம் முழுக்க முழுக்க என்னுடைய பாணியிலேயே உருவாகப் போகிறது. அந்த வகையில் மாஸ்டர் படத்திலிருந்து விஜய் 67 வது படம் முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.