நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

வில்லன் நடிகர் ஹரிஷ் உத்தமன் மற்றும் ஷீலா ராஜ்குமார் நாயகன், நாயகியாக நடிக்கும் படம் நூடுல்ஸ். மதன் தக்ஷிணாமூர்த்தி இந்தப் படத்தை எழுதி இயக்கியதோடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அருவி படப்புகழ் திருநாவுக்கரசு, வசந்த் மாரிமுத்து மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ராபர்ட் சற்குணம் இசை அமைத்துள்ளார். ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் பிரக்னா அருண் பிரகாஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பாண்டிய நாடு, மீகாமன், யாகாவாராயினும் நாகாக்க, தனி ஒருவன், பாயும்புலி, தொடரி, றெக்க, பைரவா, கைதி, விக்ரம் உள்ளிட்ட பல படங்களிலும், சுழல் வெப் தொடரிலும் வில்லனாக நடித்த ஹரிஷ் உத்தமன் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.