நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் சித்தார்த், அரசியல் சார்ந்து தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சையாவது வழக்கம். கடந்த அதிமுக ஆட்சியின்போது, அதிமுக மற்றும் பா.ஜ., குறித்து தொடர்ந்து தனது கருத்துகளை தெரிவித்து வந்த சித்தார்த், திமுக ஆட்சி வந்ததும் அரசை குற்றம்சாட்டுவது குறைந்துள்ளது. இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் தனது பெற்றோரை ஹிந்தியில் பேச சொல்லி கட்டாயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டதாவது: கூட்டமே இல்லாத மதுரை விமானநிலையம் வந்த வயதான எனது பெற்றோர், சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகினர். அவர்கள் என் பெற்றோர்களிடம் பையிலிருக்கும் நாணயங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் எங்களிடம் ஹிந்தியில் தொடர்ந்து பேசியதால் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறியும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஹிந்தியில் மட்டுமே பேசினார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது 'இந்தியாவில் இப்படித்தான் இருக்கும்' என்றார்கள். வேலையில்லாதவர்கள் எல்லாம் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.