நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாள சினிமாவில் இருந்து விஷால் நடித்த தாமிரபரணி படம் மூலம் தமிழுக்கு வந்தவர் பானு. மலையாளத்தில் முக்தா என்ற இயற்பெயரில் நடித்து வந்தவரை இயக்குனர் ஹரி தமிழுக்காக பானு என்று மாற்றினார். தாமிரபரணிக்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்த பானு சரியான வாய்ப்புகள் இன்றி கேரளாவுக்கே சென்று விட்டார். 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாவிட்ட பானு அதன் பிறகு பெரிதாக நடிக்க வில்லை 2017ம் ஆண்டு நடித்த பாம்பு சட்டைதான் அவர் கடைசியாக நடித்த படம்.
5 வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த படம் சகுந்தலாவின் காதலன். இந்த படத்தை காதலில் விழுந்தேன், எப்படி மனசுக்குள் வந்தாய் படங்களை இயக்கிய பி.வி.பிரசாத் இயக்கினார். ஒரு திருடனிடம் தனது சங்கிலியை பறிகொடுத்த பெண் அதனை எப்படி அவனிடம் இருந்து மீட்கிறாள் என்பதுதான் படத்தின் கதை. திருடனாக இயக்குனர் பி.வி.பிரசாத்தும், பறிகொடுத்து பெண்ணாக பானுவும் நடித்தனர். தயாரிப்பாளரின் பல பிரச்சினைகள் காரணமாக முடங்கி கிடந்த இந்த படம் வருகிற 30ம் தேதி வெளிவருகிறது.