100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
நடிகை அருள்ஜோதி ஆரோக்கியராஜ், தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த 'நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் . அதன்பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரைக்கு வந்த அருள்ஜோதி, ஜீ தமிழின் 'நினைத்தாலே இனிக்கும்', விஜய் டிவியின் 'பாரதி கண்ணம்மா' ஆகிய தொடர்களில் ஏற்கனவே நடித்து வந்த நடிகைகள் விலகிவிட, ரீப்ளேஸ்மெண்டாக நுழைந்தார். ஆனாலும், மிககுறுகிய காலத்தில் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்ததுடன் இன்ஸ்டாகிராமிலும் டீசென்ட்டான புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் காதல் நாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில், பாவாடை தாவணியில் அவர் அண்மையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பலரையும் கிறங்கடித்து வைரலாகி வருகிறது. அருள்ஜோதியின் அழகில் மயங்கிய ரசிகர்கள் பலரும் கமெண்ட் பாக்சில் ஹார்டின் மழை பொழிந்து லவ் ப்ரொபோஸ் செய்து வருகின்றனர்.