நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய்யின் படங்கள் என்றாலே ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது ஆக்சன் காட்சிகளுக்கு அடுத்ததாக நிச்சயம் நடன காட்சிகளை தான். அதற்கேற்றபடி அவரும் ஒவ்வொரு படத்திற்கும் குறைந்தபட்சம் இரண்டு பாடல்களுக்காவது வித்தியாசமான நடனம் ஆடி ரசிகர்களை தவறாமல் மகிழ்வித்து வருகிறார். இதற்கு பின்னணியில் ஜானி, சோபி ஆகிய மாஸ்டர்கள் விஜய்க்கு பக்கபலமாக செயல்பட்டு வருகின்றனர். விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள வாரிசு படத்திலும் ஷோபி மாஸ்டர் ஜிமிக்கி பொண்ணு என்கிற பாடலுக்கு நடனம் வடிவமைத்துள்ளார்.
ஆனால் வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொண்டு பேசும்போது அந்த பாடல் பற்றி குறிப்பிடுவதற்கு பதிலாக பாப்பா பாப்பா என்ற பாடலுக்கு நடனம் அமைத்துள்ளதாக தவறுதலாக குறிப்பிட்டு விட்டார். இப்படி ஒரு பாடல் படத்தில் இல்லையே என ரசிகர்கள் குழம்பிப் போனார்கள். ஆனால் தற்போது இதுபற்றி ஒரு விளக்கம் அளிக்கும் விதமாக ஜிமிக்கி பொண்ணு என்கிற பாடலுக்கு பதிலாகத்தான் பாப்பா பாப்பா என்ற பாடலை குறிப்பிட்டு விட்டேன் என்று கூறி சமாளித்துள்ளார் ஷோபி மாஸ்டர். இந்தப்பாடலை அனிருத்தும் ஜோனிடா காந்தியும் இணைந்து பாடியுள்ளனர்.